மைத்திரி - ரணில் வெளிநாட்டில்! ஒரு நாள் முழுவதும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட நிலை

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றிருந்த நிலையில், கடந்தவாரம் ஒரு நாள் முழுவதும் இரண்டு கோடி மக்களுக்குப் பொறுப்பேற்கும் நிலையில் யாரும் இருக்கவில்லை.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீஷெல்ஸ் சென்றிருந்தார்.

அதேநேரம் பிரதமர் நோர்வே சென்றிருந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு நாள் முமுவதும், இரண்டு கோடி மக்களுக்கு பொறுப்பான தலைவர்கள் யாரும் நாட்டில் இருக்கவில்லை.

ஜனாதிபதி, பிரதமருக்கு அடுத்த நிலையில் சபாநாயகர் இருக்கின்ற போதிலும், நாட்டை கவனித்துக்கொள்ளுமாறு அவரிடம் கூறப்படவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த சில நாட்களிலும் இவ்வாறான ஒரு நிலை ஏற்படலாம் என அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அடுத்த வாரமளவில் வெளிநாடுகளுக்கு செல்லவதன் காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers