இடைக்கால பொறுப்பு அரசாங்கத்தை அமைப்பது சுலபமல்ல: ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் கூட்டணி அரசாங்கத்திற்குள் மோதல்கள் முற்றினாலும் இடைக்கால தற்காலிக பொறுப்பு அரசாங்த்தை அமைப்பது இலகுவான காரியமல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி அப்படியான இடைக்கால பொறுப்பு அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் கட்டாயம் ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற்றாக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியை காட்டிக்கொடுத்த சிறிசேன என்று அப்போது அவமதித்தவர்கள், ஜனாதிபதியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பது எந்த கொள்கைகளும் அற்ற சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது.

அப்படி இடைக்கால பொறுப்பு அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

அப்போது கூட்டு எதிர்க்கட்சியினர் ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆததவை பெற நேரிடும். இந்த இடைக்கால பொறுப்பு அரசாங்கம் என்பது போலியானது.

வழக்குகளில் இருந்து விடுப்பட்டு சிறைக்கு செல்வதில் இருந்து தப்பிக்கும் தேவையே இந்த அரசியல் அணிக்கு இருப்பதாகவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.