ஊடகங்கள் கேட்க கூடாத விடயங்களும் இருக்கின்றன: ரஞ்சித் மத்தும

Report Print Steephen Steephen in அரசியல்

ஊடகங்கள் கேட்க வேண்டிய விடயங்களும் இருப்பதாகவும், கேட்க கூடாத விடயங்களும் இருப்பதாகவும் தான் விரும்பியவற்றுக்கு மட்டுமே தான் பதில் வழங்குவதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

செவனகலை துங்கேமகல பிரதேசத்தில் உள்ள விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபரை விலகுமாறு கூறிள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் பதவி விலகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன அது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அது பற்றி எனக்கு தெரியாது. நான் பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு உத்தரவிடவில்லை எனக் கூறியுள்ளார்.

அதேவேளை இடைக்கால அரசாங்கம் மற்றும் எரிபொருள் விலை சூத்திரம் பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மத்துமபண்டார,

ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட சில கட்சிகள் இணைந்து மக்களின் பெரும்பான்மை விருப்பதுடன் ஆட்சி அமைத்துள்ளன.

தோல்வியடைந்துள்ளவர்கள் எப்படி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும். என்ன கதைகள் கூறப்பட்டாலும் நாங்கள் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம்.

எரிபொருள் விலை சூத்திரம் பற்றி அனைவரும் பேசுகின்றனர். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அதிகரிக்கவும் குறையும் போது குறைக்கவுமே விலை சூத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

யார் என்ன கூறினாலும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தை விட தற்போதும் எரிபொருள் விலை குறைவாகவே உள்ளது. ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மசகு எண்ணெயின் விலை குறைந்திருந்த நேரத்திலும் எரிபொருள் விலை அதிகரித்தே காணப்பட்டது.

தற்போது மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையிலும் அரசாங்கம் குறைந்த விலைக்கே எரிபொருளை வழங்குகிறது.

நாமல் ராஜபக்ச செல்லும் இடங்களில் எல்லாம் அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக கூறுகிறார். இரண்டு போயா தினங்களில் அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று கூறினார்கள்.

தற்போது எத்தனை போயா தினங்கள் கடந்து விட்டன. நாங்கள் தொடர்ந்தும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம். இவர்கள் கூறுவது போல் அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது எனவும் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers