புதிய பொலிஸ்மா அதிபராக எஸ்.எம்.விக்ரமசிங்க?

Report Print Murali Murali in அரசியல்

புதிய பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் தலைவராக பணியாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அடுத்தவாரம் தனது பதவியிலிருந்து விலக கூடும் எனவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க 12 ஆண்டுகளாக, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

அத்துடன், பூஜித ஜயசுந்தரவும், எஸ்.எம்.விக்ரமசிங்கவும், உதவி காவல்துறை கண்காணிப்பாளராக, 1985ம் ஆண்டு இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers