ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார்மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய எதிர்காலத்தில், கேள்விப்பத்திர கோரல் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
விமான சேவையின் 49 சதவீத முகாமைத்துவ பங்குகளை தனியார் மயப்படுத்தப்படுத்துவதற்கான, திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளமையே இதற்கான காரணம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.