கூட்டு எதிர்க்கட்சிக்கு சவால் விடுக்கும் அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

முடிந்தால் இடைக்கால பொறுப்பு அரசாங்கத்தை அமைத்து காட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுப்பதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பீ. ஹெரிசன், தற்போது ஆட்சியில் இருப்பது கூட்டணி அரசாங்கம் எனவும் அதனை மாற்ற அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேருக்கு முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.