இலங்கை தமிழர்களுக்கு ஆபத்து! எச்சரிக்கும் இந்திய மத்திய அமைச்சர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவது, இலங்கை தமிழர்களுக்கு ஆபத்தானது என, இந்திய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்குற்றங்களில், பிரதான குற்றவாளியாக காங்கிரஸ் கட்சியே உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது, இலங்கை தமிழர்களுக்கு மாத்திரமன்றி, அது தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்தாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலைக்கு எதிராக, மத்திய அரசாங்கம் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை எனவும் பொன். ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.