புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன்? மகிழ்ச்சி வெளியிட்டுள்ள இந்திய முக்கியஸ்தர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

iaமூத்த தலைவர் பழ. நெடுமாறன் கூறுவதுபோல தமிழீழ விடுதலைப் புலகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி என இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, இராமநாதபுரத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு பேசிய தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். அவர் மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட வருவார் என தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பொன் இராதாகிருஷண்னன் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக தமிழ் ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.

மூத்த தலைவர் பழ. நெடுமாறன் மிகுந்த மரியாதைக்குரியவர். அவர் கூறுவதைப்போல பிரபாகரன் மீண்டும் வந்தால் தமிழ்ச்சமூகம் மகிழ்ச்சியடையும் எனவும் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Latest Offers