தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விஜயகலா அழைப்பு

Report Print Rakesh in அரசியல்
674Shares

அரசை குறை கூறி எந்த விதத்திலும் நாங்கள் சாதிக்க முடியாது என்பதால் அரசுடன் இணைந்து நாங்கள் பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையின் கீழ் பருத்தித்துறை பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட மக்கள் நேற்று பயன்பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதுடன், ஏனைய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.