ஹோட்டலொன்றில் சந்தித்துக் கொண்ட மஹிந்தவும், மைத்திரியும்

Report Print Ajith Ajith in அரசியல்
261Shares

இடைக்கால அரசாங்கம் தொடர்பான இரகசிய சந்திப்பின் பின்னர் மஹிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் நேற்றைய தினம் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தித்துள்ளனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மைத்திரியை பார்த்து 'வேலை, சரிவரவில்லைதானே' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மைத்திரிபால அதுவா? என்று கேட்டுள்ளார். எனினும் இதனை பார்த்து கொண்டிருந்த ஏனைய விருந்தாளிகள் இவர்கள் எதனை பற்றி கதைக்கிறார்கள் என்ற தெரியாமல் இருந்துள்ளனர்.

இருப்பினும் அவர்கள் இருவரும் பிரதமர் ரணிலுக்கு பதிலாக மஹிந்த ராஜபக்சவை இடைக்கால பிரதமராக்கும் வகையிலான பேச்சுக்களை ஏற்கனவே நடத்தியிருந்தனர் என்பதை அறிந்தவர்கள், அவர்களின் பேச்சின் உள்அர்த்தத்தை புரிந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தநிலையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின்போது நிறைவேற்றும் வகையில் மஹிந்தவும், மைத்திரியும் இடைக்கால அரசாங்க திட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த இரகசிய பேச்சு அம்பலமானதை அடுத்து தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தம்மை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை இடைக்கால அரசாங்கம் என்ற பேச்சை மஹிந்த ராஜபக்ச மறுத்து வருகின்ற போதும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற அவர் சார்ந்துள்ள கட்சி இடைக்கால அரசாங்க பேச்சை மைத்திரியுடன் முன்னெடுக்க அவருக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.