அரசியல்வாதிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

Report Print Vethu Vethu in அரசியல்
323Shares

இலங்கையில் ஊழல் ஆரம்பிப்பதே அரசியல்வாதிகளிடம் இருந்து தான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள எத்தனை அரசியல்வாதிகளுக்கு மேடையில் ஏறி நான் மோசடி செய்யவில்லை என துணிச்சலாக கூற முடியும்? அவ்வாறு கூற கூடியவர்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளனர்.

அரச சேவையில் உள்ள உயர் அதிகாரிகளை, அரசியல்வாதிகள் தங்களின் நன்மைக்காக மோசடி செய்தவற்கு பழக்கப்படுத்தினார்கள். அதன் பின்னர் மோசடி பழக்கத்திற்கு அடிமையாக்க வைத்து விட்டார்கள்.

அனைவருக்கும் இந்த குற்றச்சாட்டு உகந்ததல்ல. கீழ் மட்டத்தில் உள்ள ஏழை அப்பாவி ஊழியர்கள் மீது நான் குற்றம் சுமத்தவில்லை.

உயர் மட்டத்தில் உள்ளவர்களே வெளிப்படையாகவும் இரகசியமாகவும் இந்த மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

நாட்டின் பொருளாதார பாதிப்பிற்கு ஆரம்ப காரணம் இதுவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.