மாலைதீவின் அரச உயர் அதிகாரிகள் 4 பேர் இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைதீவு தேர்தல் சபையின் நான்கு முக்கியஸ்தர்கள் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்.
அண்மையில் மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் கட்சி ஆதரவாளர்களினால் விடுக்கப்படும் அச்சுத்தல்கள், அழுத்தங்களினால் இவ்வாறு குறித்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தேர்தல் முடிவுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் மொஹமட் வெற்றியீட்டியுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி இப்ராஹிம் மொஹமட் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.