வடக்கு, கிழக்கு அபிவிருத்தி ஜனாதிபதி செயலணிக்கு 9 அமைச்சுக்களின் செயலாளர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்
90Shares

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தவும், கண்காணிக்கவும், அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு, 9 அமைச்சுக்களின் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கத்தவர்கள் விபரங்கள் வருமாறு,

மாகாணசபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலர் கமல் பத்மசிறி, சமூக நலன் மற்றும் ஆரம்ப தொழில்துறை அமைச்சின் செயலர் பந்துல விக்கிரமஆராச்சி, கல்வி அமைச்சின் செயலர் சுனில் ஹெற்றியாராச்சி,

நிலையான அபிவிருத்தி, வன உயிரினங்கள், மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் செயலர் கீத்சிறி, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலர் திசநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்யரத்ன,

சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலர் வீரக்கோன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் கொடிக்கார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலர் அசோக அலவத்த ஆகியோரே ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்த செயலணியின் மூலம் எதிர்பார்க்கப்படும் சாதகமான விளைவுகளை அடைவதற்கு, பல்வேறு துறைகளின் ஆளணி வளங்களின் பிரதிநிதித்துவம் அவசியம் கருதி 9 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனம் இடம்பெற்றுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தல் தமிழில்