ஶ்ரீலங்கன் விமானத்தில் மீண்டும் சர்ச்சைக்குரிய மரமுந்திரி!

Report Print Nivetha in அரசியல்
130Shares

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரியை விநியோகிக்க மரமுந்திரி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லக்ஷமன் கிரிஹெல்ல வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் வழங்கப்படும் மரமுந்திரிகையை நாய் கூட சாப்பிடாது என அண்மையில் ஜனாதிபதி மைத்திரி கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் பயணிகளுக்கு மரமுந்திரிகை வழங்குவதனை ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம் இடைநிறுத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அமைச்சர் லக்மன் கிரிஹெல்லவினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.