நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பது தமிழீழ விடுதலைப் புலிகள்தான்!

Report Print Nesan Nesan in அரசியல்
145Shares

நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பது தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்களுமாகவே இருந்தது என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட ஊடக பேச்சாளர் பீ. கோனேஸ் தெரிவித்துள்ளார்.

வெல்லாவெளியில் அமைந்துள்ள கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என போராடிய நமது மாவீரர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னின்று நடாத்துவது பொதுவாக ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கே உரியது.

அந்தவகையில், கடந்த காலங்களில் நடைபெற்ற மாவீரர் தினம் அன்னைபூபதி அம்மாவின் நினைவேந்தல் மற்றும் மாலதி அக்காவின் நினைவு நாள் நிகழ்வுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பொது மக்களுக்களுடையவையாகும்.

தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஏற்பாடுகள் செய்வது ஜனநாயகப் போராளிகள் கட்சியினரே. எனவே எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் எமது கட்சியினரிடம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் செய்ய முன்வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் எமது கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதுனால் ஒரு பலம் வாய்ந்த செயற்பாடுகளாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையினால் வடக்கில் உள்ளவர்கள் எமது தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கிழக்கில் நினைவு நிகழ்வுகளை எமது மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் என். நகுலேஸ் தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் பீ. கோனேஸ் தெரிவித்துள்ளார்.