நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை

Report Print Kamel Kamel in அரசியல்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாகவில்லை.

ஜனாதிபதி கொலைச் சதி முயற்சி தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு நாலக டி சில்வாவிற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பாணை விடுத்திருந்தனர்.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள நாலக டி சில்வா மீது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய தினம் வாக்குமூலம் அளிக்க முடியாது என நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்கு வேறு ஓர் தினத்தை ஒதுக்கித் தருமாறும் அவர் கோரியுள்ளார்.