கொழும்பில் தனித்தனியாக மந்திராலோசனை நடத்தும் மைத்திரி – மஹிந்த! சுயாதீன அணியினர் யார் பக்கம்?

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது ஆரம்பமாக உள்ளது.

இந்த விசேட மத்திய குழு கூட்டத்தில் 15பேர் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியின் உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என குறித்த சுயாதீன அணியினர் கடந்த மத்திய குழு கூட்டத்தில் சமர்ப்பித்த கடிதம் குறித்தும் இன்றைய விசேட மத்தியகுழு கூட்டத்தில் ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியினரின் கட்சித் தலைவர்களின் கூட்டம் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியின் உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.