மைத்திரி மீது சம்பந்தன் கொண்டுள்ள அதீத நம்பிக்கை! நாளை ஜனாதிபதி கூறப்போவது என்ன?

Report Print Murali Murali in அரசியல்

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் தீர்வு ஒன்றை வழங்குவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து பேசியிருந்தேன். இதன் போது 17ம் தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அத்துடன், நீதியமைச்சருடனும் இந்த விவகாரம் தொடர்பில் பேசுவதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துடன் ஜனாதிபதிக்கு உடன்பாடு உள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சாதகமான தீர்வொன்றை வழங்குவார் என நாங்கள் எதிர்பார்க்க முடியும்” என இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.