தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும்! நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர்

Report Print Rakesh in அரசியல்

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அரசியல் கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.