ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய ரோ அமைப்பு சதி! அரசாங்கம் அம்பலப்படுத்தியுள்ள புதிய தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

தம்மை கொலை செய்ய இந்திய ரோ புலனாய்வுப் பிரிவு சதித்திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி நேற்று அமைச்சவையில் கூறினார் என வெளியான செய்தியில் உண்மையில் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நாமல் குமார என்பவர் செய்த முறைப்பாடு தொடர்பில் நாலக டி சில்வா, விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் விசாரணைகள் தொடர்பில் தமக்கு இன்னும் உரிய தகவல்கள் தமக்கு தரப்படவில்லை என்றே ஜனாதிபதி தெரிவித்ததாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

இதனையே செய்தித்தாள்கள், மாறுப்பட்ட செய்திகளாக வெளியிட்டுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என்று மைத்திரிபால சிறிசேன கூறிய நிலையில் அவருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக வெளியான செய்தி தொடர்பிலும் ராஜிதவிடம் கேள்விக்கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், இது எந்தவொரு அமைச்சரவையிலும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றமை போன்றே நேற்றும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.