ஜனாதிபதியை கொலை செய்ய றோ அமைப்பு சதி? மோடியுடன் மைத்திரி தொலைபேசியில் அவரசமாக பேச்சு

Report Print Murali Murali in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தொலைபேசியில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகபிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

“தம்மை கொலை செய்ய இந்திய றோ புலனாய்வுப் பிரிவு சதித்திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி நேற்று அமைச்சரவையில் கூறினார்” என தகவல்கள் வெளியாகின. இந்திய ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தொலைபேசியில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.