அமைச்சரவை தொடர்பான ஊடக செய்தியில் உண்மையில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

வாரந்தோறும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றதுடன், அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்ததாக ஊடகங்களில் இன்று வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. எனினும் அந்த செய்தியில் உண்மையில்லை.

உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி துறை சம்பந்தமான இந்திய அரசோ அல்லது இந்திய நிறுவனங்களோ இலங்கையில் செயற்படுத்த உள்ள திட்டங்கள் தொடர்பான எந்த யோசனைகளும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை.

மேலும் பிம்ஸ்டென் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பில் இரண்டு தலைவர்களும் பேசிக்கொண்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.