அமைச்சர் மனோகணேசனுடன் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் சந்திப்பு

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

அமைச்சர் மனோகணேசனை, காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி, உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் மற்றும் எதிர்நோக்கும் புறக்கணிப்புகள் தொடர்பாக விரிவாக ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் பல விடயங்கள் தொடர்பில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் இதன்போது முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

Latest Offers