மைத்திரி - மோடி உரையாடல் குறித்து இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று தொலை பேசியில் உரையாடியமை தொடர்பாக இந்திய பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளதோடு இந்த செய்தி தொடர்பாக தெ ஹிந்து செய்தித்தாளிலும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பிரதமர் அலுவலக தகவல்படி,

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “தாம் அமைச்சரவைக் கூட்டத்தின் போது தம்மை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் இந்திய உளவுப்பிரிவான ரோவின் தலையீடு குறித்து கருத்து எதனையும் வெளியிடவில்லை என்று இந்திய பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தெ ஹிந்துவின் செய்தி தமக்கும் இந்திய பிரதமருக்கும் இடையிலான உறவை பாதிப்படைய செய்யும் வகையில் வெளியிடப்பட்டது என மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி வெளியானதன் பின்னர் அது தொடர்பில் இந்திய பிரதமர் தனிப்பட்ட ரீதியில் எடுத்த நடவடிக்கை மற்றும் இலங்கை அரசாங்கம் இந்த செய்தியை உடனடியாக நிராகரித்தமை போன்றவை தொடர்பில் மைத்திரி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.”

இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் மோடி,

“குறித்த செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையை பாராட்டியுள்ளார். அத்துடன் அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை மீது தனிப்பட்ட அக்கறையை கொண்டிருப்பதாகவும் மோடி, மைத்திரியிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் இரண்டு அமைச்சர்களிடம் தமது ஊடகவியலாளர், பெற்ற உத்தியோகப்பற்றற்ற உறுதிப்படுத்தலின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இந்திய ரோவை குற்றம் சுமத்திய செய்தியை தாம் பிரசுரித்தததாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த அமைச்சர்கள் இருவரும் வேறு ஒரு அரசியல் காரணங்களுக்காக பொய்யான தகவல்களை வழங்கியிருக்கலாம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தமையையும் தெ ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers

loading...