அமைச்சரவையில் பேசாத பொய்யான தகவலை வழங்கும் நபர்களை கண்டுபிடிக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவையில் பேசப்பட்டதாக பொய்யான தகவல்களை வழங்கும் நபர்கள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில், தன்னை கொலை செய்யும் திட்டத்துடன் இந்திய புலனாய்வு அமைப்பின் றோ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியதாக வெளியான பொய்யான ஊடக செய்தி தொடர்பாக இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் தகவலின் மூலம் என்ன என்று ஊடகவியலாளர்களிடம் கேட்க மாட்டோம். அந்த மரியாதையை நாங்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்குவோம். ஊடகவியலாளர் ஒருவருக்கு கூறியதை அவர் வெளியிட்டுள்ளார்.

எனினும் இப்படியான மிகப் பயங்கரமான சம்பவம் ஒன்றை உருவாக்கி முன்வைக்கும் நபர்களுக்கு தமது பெயரை கூற ஆத்ம சக்தி இருக்க வேண்டும்.

அமைச்சரவையில் பேசப்படாத விடயத்தை பேசியதாக கூறி எந்த பொறுப்பும் இல்லாமல் இரண்டு நாடுகளுக்கு இடையில் நெருக்கடியை ஏற்படுத்துவதும் உருவாக்குவது யார் என்பதை கண்டுபிடிக்கவும் வேண்டும்.

இதனால், பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக நேற்றைய நாள் முழுவதையும் ஜனாதிபதி இதற்காக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...