நாட்டு மக்கள் தொடர்பில் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள கவலை!

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகள் காரணமாக நாட்டு மக்களே இழப்பீட்டை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொறியியலாளர்கள் முன்னணி ஒழுங்கு தொழில்சார் நிபுணர்களின் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அரசாங்கமோ நாடோ இருக்கின்றதா என்பது எமக்கு தற்போது கேள்விக்குரியாக உள்ளது. நாட்டில் எந்த அபிவிருத்தித் திட்டங்களோ, நிர்வாக திட்டங்களோ இன்றி செயற்படுவதன் மூலம் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

பிரதமர் கூறுவது ஜனாதிபதிக்கு தெரியாது. இப்படியான நிலைமையில் நாட்டை எப்படி அபிவிருத்தி செய்வது என்ற பிரச்சினை எழுந்துள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers