திருடர்கள் வீரர்களாக மாறியுள்ளனர்: எஸ்.எம். மரிக்கார்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காத காரணத்தினால், அரசாங்கம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டு வந்த அபிவிருத்தி தொடர்பான விடயங்களை சந்தைப்படுத்தாத காரணத்தினால், தற்போது திருடர்கள் வீரர்களாக மாறியுள்ளதுடன் வீரர்கள் திருடர்களாக மாறியுள்ளனர்.

அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த ஆரம்ப காலத்தில் விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் உட்பட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பத்தில் இது குறித்து சுட்டிக்காட்டிய போதும், அவை செயற்படுத்தாத காரணமாக அரசாங்கம் கேட்டு வாங்கி கட்டிக்கொண்டுள்ளது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.