அவசரமாக ஜனாதிபதியை சந்திக்கும் ஐ.தே.கட்சியின் பிரதிநிதிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் முதலீட்டுச் சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளை கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம் பற்றி கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி சந்திக்க உள்ளதாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் பொறுப்பின் கீழ் உள்ளதுடன் இலங்கை முதலீட்டுச் சபை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் பொறுப்பின் கீழ் உள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர் இருவருக்குரிய மூன்று நிறுவனங்களுக்கு அவர்கள் நியமித்த பணிப்பாளர் சபைகளை கலைக்க, ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...