ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சிறைக்குள் நடந்த கொடுமை? நிர்வாணப்படுத்தப்பட்டாரா?

Report Print Steephen Steephen in அரசியல்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தான் மற்றும் தன்னுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு அதிகாரிகள், கைதிகள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சிறைச்சாலையில் இருக்கும் போது பல்வேறு தொந்தரவுகளை சந்திக்க நேர்ந்தது.

இவை அரசாங்கத்தின் தேவைக்கு அமைய நடந்தவை. நீதியமைச்சர் தலதா அத்துகோரள கொழும்பில் இருந்து அனுப்பிய அதிகாரிகள் இதனை செய்தனர்.

2006ஆம் ஆண்டு முதல் சதோச நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய அதிகாரியும் எனது செயலாளரும் நிர்வாணப்படுத்தப்பட்டனர்.

இவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டு, அவர்கள் கைதிகளுக்கு முன்னால் நிர்வாணப்படுத்தப்பட்டனர் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers