இந்தியா சென்றடைந்தார் ரணில்: றோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவுள்ள மோடி?

Report Print Ajith Ajith in அரசியல்

இன்று பிற்பகல் இந்தியாவுக்கு பயணமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லியை சென்றடைந்துள்ளார்.

பிரதமருடன், அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் 5ஆவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் பிரமுகர்களையும் சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் சதித்திட்டத்தில் இந்திய புலனாய்வு பிரிவான றோ தொடர்பு பட்டுள்ளதாக நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியதாக சில அமைச்சர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகத்தில் வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கைப் பிரதமரிடம், இந்தியப் பிரதமர் கேள்வி எழுப்புவார் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...