இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைக்கவில்லை! சீனா அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைக்கவில்லை என சீனா தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் இலங்கை பெற்றுக்கொண்ட மொத்த வெளிநாட்டு கடன் தொகையில், சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட தொகையானது 10 வீதமாகும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் தெரிவித்துள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில சர்வதேச ஊடகங்கள் இலங்கை விவகாரத்தை பிழையாக பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைப்பதற்கு சீனா முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பாரியளவில் கடன் வழங்கி நெருக்கடிக்குள் ஆழ்த்தியிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளாh.

Latest Offers

loading...