நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளை ஒரு தரப்பினால் தீர்க்க முடியாது

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளை ஒரு தரப்பினரால் தீர்க்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பிரச்சினைகள் அனைத்தையும் ஒரு குழு அல்லது ஒரு தரப்பினால் தீர்த்து வைத்து விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து கட்சியின் தலைவர்களும் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்சிகளின் தலைவர்களுக்கு தாம் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Latest Offers