கோபமடைந்த மகிந்த ஊடக சந்திப்பிலிருந்து இடைநடுவில் வெளியேறினார்

Report Print Murali Murali in அரசியல்

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளினால் கோபமடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர் சந்திப்பில் இருந்து இடைநடுவில் வெளியேறிருந்தார்.

சதொச விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் நேற்று நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று கொழும்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளினால் கோபமடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர் சந்திப்பில் இருந்து இடைநடுவில் எழுந்துசென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers