கூட்டமைப்பின் முக்கியஸ்தரின் கேள்வியால் தடுமாறிய ஐ.நாவின் சிரேஸ்ட அதிகாரி

Report Print Dias Dias in அரசியல்

இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவு கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கூட்டத்தொடர் ஒன்றிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள், ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அதிகாரி தோமஸ் அவர்களை சந்தித்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின்போது, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான, அலவத்துவல, தெஹிவல லியனகே, சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சார்ள்ஸ் நிர்மலநாதன், சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, அதிகாரி தோமஸிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பிரேரணை தொடர்பில் இலங்கை இதுவரையில் எவ்வித கரிசணையும் காட்டவில்லை என்றும், காணாமல் போனவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அதிகாரி தோமஸ், கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை மீது ஐ.நா விடுத்த பிரேரணை மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அது தொடர்பான நடைமுறை பாதிப்புக்கள் தொடர்பிலும், இலங்கை ஐ.நாவின் பிரேரணைக்கு அமைய இலங்கை செயற்படாத விடத்து அது தொடர்பில் சர்வதேசத்தில் எழும் கேள்விகள் தொடர்பிலும் அங்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட குழுவினருக்கு எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், குறித்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கு அதிகாரி தோமஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பல நாடுகளில் இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் விரைவில் தீர்க்கப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் கிடைக்கப்பெற்றன எனினும் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டும் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்த கதியில் செயற்படுவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை தானும் ஏற்றுக்கொள்வதாகவும், இதற்கு உடன்படுவதாகவும் தெரிவித்த அதிகாரி தோமஸ், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் துரிதப்படுத்தப்படவில்லையெனில் அது தொடர்பான சர்வதேசத்தின் அழுத்தங்களும், கேள்விகளும் எழும் என குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அதிகாரி தோமஸிடம் வினவியபோது, அதற்கு அவர் மௌனம் காத்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers