பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு மஹிந்த குழு அமைப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிணைமுறி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, முன்னாள் பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த குழுவினை உருவாக்கியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலான தீர்வு திட்டங்கள் குறித்த அறிக்கையொன்று முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Latest Offers