ஐ.தே.கவின் முதல் பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சமால் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம், பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான நியமன கடிதத்தை நேற்று வழங்கியுள்ளார்.

பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி குறித்த யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியிருந்தது.

சமால் செனரத் கடந்த காலங்களில் மேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் அரசியல் கட்சியொன்று முதல் தடவையாக பிரரதம நிறைவேற்று அதிகாரி பதவியொன்றை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.