சிங்கள இனம் அழிவடைந்து செல்கின்றது: கரு ஜயசூரிய

Report Print Kamel Kamel in அரசியல்

உலகில் அழிவடைந்து செல்லும் இனங்களில் ஒன்றாக சிங்கள இனம் மாறியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரநாயக்க ஹோரேவெல ஸ்ரீ ஹேவசிங்கராம விஹாரையில் நேற்று நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

உலகில் அழிவடைந்து செல்லும் மூன்று இனங்களில் ஒன்றாக இலங்கையின் சிங்கள இனம் மாறியுள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்கள இனம் என்பனவே இவ்வாறு அழிவடைந்து செல்கின்றது. இந்த விடயம் தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நான் சொல்லும் இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Latest Offers