நாட்டில் பரப்பரப்பை ஏற்படுத்திய நாமல் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் இருப்பதாக கூறி நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார என்ற நபர், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கீழ் கேகாலை மாவட்ட செயலகத்தில் சேவையாற்றி வந்துள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் மருத்துவர் சமந்த குமார கிதலவ ஆராச்சி இது தொடர்பாக கேகாலை மாவட்ட செயலாளருக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தில் தன்னார்வ சேவையில் ஈடுபட கேகாலை மாவட்டம் வரக்காபொல பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் ஏ.எம். நாமல் குமார முன்வந்துள்ளதாகவும் தேவையான நேரத்தில் இவரது சேவையை பெற்றுக்கொள்ளுமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி அல்லது முக்கியஸ்தர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவது தொடர்பாக தேசிய புலனாய்வு சேவை உட்பட புலனாய்வு துறையினருக்கு இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்பதுடன், அப்படியான தகவல் குறித்து புலனாய்வு துறையினரும் வெளியிடவில்லை எனக் கூறப்பட்டுள்ளது..

குறிப்பாக போர் நடைபெற்ற காலத்தில் வலுப்படுத்தப்பட்ட இலங்கையின் புலனாய்வு துறையினரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு கொலைகள் தொடர்பான சதித்திட்டங்கள் அல்ல விளையாட்டு வீட்டை கூட கட்ட முடியாது என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.