இலங்கை, தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்கள்: சென்னை விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர்

Report Print Shalini in அரசியல்

இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் வளர்ச்சி திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

வடக்கு பகுதியில் 28,000 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மாங்குளம் தொழில் பூங்காவாக மாறி வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழர்கள் வாழும் பகுதியில் 82 சதவீத நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers