கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியை கைது செய்ய போதுமான விடயங்கள் உள்ளன - புலனாய்வுப் பிரிவினர்

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி அத்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தனவை கைதுசெய்ய போதுமான விடயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கூட்டுப்படைகள் தலைமை அதிகாரிகளை அடுத்த வாரத்திற்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்க கடிதத்தை தயார் செய்து வருவதாக அதிகாரிகள், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் அறிவித்துள்ளனர்.

கைதுசெய்ய போதுமான விடயங்கள் இருப்பதால், அந்த விடயங்கள் தொடர்பில் கடிதத்தை தயார் செய்து வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.