ராகுல் காந்தியை சந்தித்தார் பிரதமர் ரணில்!

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரசிங்கவுக்கும் இந்தியாவின் தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை புதுடெல்லியில் உள்ள தாஜ் ஹொட்டலில் இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்து சமுத்திரத்தின் கடல் போக்குவரத்தை உறுதிப்படுத்த இலங்கை ஆரம்பித்துள்ள திட்டம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ஆனந்த்சர்மா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பிராந்திய பொருளாதாரம் மற்றும் அரசியல் போக்குகள் பற்றியும் இந்த பேச்சுவார்த்தையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களுக்கு குறித்து அறிய இந்திய தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகள் அக்கறை காட்டியதாக பிரதமரின் செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளார். ராகுல் காந்தி இந்த அழைப்பை நன்றியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் பிரதமரின் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் அர்ஜூன ரணதுங்க, சாகல ரத்நாயக்க, மலிக் சமரவிக்ரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்தராங்கனி வாகிஸ்வர, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தாவுஹெட்டி ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

அதேவேளை புதுடெல்லியில் உள்ள ஹைத்ரபாத் இல்லத்தில் நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.