இயற்கையின் ஆசி இன்றி மனிதனுக்கு முன்னேற்றமில்லை - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

இயற்கையின் ஆசிர்வாதம் இன்றி மனிதனுக்கு முன்னோக்கிய பயணம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, தமது வாழக்கையை நேசிக்கும் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் அனைவரும் இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

நாட்டின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வனப் பரப்பை அதிகரிக்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் மரக் கன்று ஒன்றை நடுவது நாட்டின் பிரஜைகள் முழு மனித வர்க்கத்திற்கும் செய்யும் கடமையும் பொறுப்புமாகும்.

நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட திட்டத்தை நாங்கள் செயற்படுத்தியுள்ளோம். அனைவரும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers