எரிபொருள் விலைச்சூத்திரம் புரியவில்லை!

Report Print Kamel Kamel in அரசியல்

எரிபொருள் விலைச் சூத்திரம் தமக்கு புரியவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அறிமுகம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்கு பொருத்தமற்றது.

பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாத வகையிலும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கிலும் ஓர் பொறிமுறைமையை உருவாக்குவது போதுமானதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரவி கருணநாயாக்கவின் பாலர் பாடசாலை மூளைக்கு விளங்கும் வகையிலேயே விலைச்சூத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers