புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாடு உயர் நீதிமன்றத்திற்கு

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பயங்கரவாத தடுப்பு சம்பந்தமான விசேட சட்டமூல வரைவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது.

இதனடிப்படையில் மனு உயர் நீதிமன்றத்தில் திங்கட் கிழமை ஆராயப்பட உள்ளது. அன்றைய தினம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்க உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட தரப்பினர் அரசாங்கம், தாக்கல் செய்த சட்டமூல வரைவை சவாலுக்கு உட்படுத்தி 7 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இரண்டு தினங்கள் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.