விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்து கோத்தா வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களே தற்போது பாதாள உலகக் குழுவிடம் உள்ளது எனத் தாம் கருதுவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் இன்று முன்னிலையானதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை பல்வேறு தரப்பினர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அந்த ஆயுதங்களே தற்போது பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் உள்ளதாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.