காணி விடுவிப்பு: வடக்கு ஆளுநர் தலைமையிலான யாழ். மன்னார் கூட்டங்கள் பிற்போடல்

Report Print Ajith Ajith in அரசியல்

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற உள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

இதேநேரம், மன்னாரில் எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.