இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன் போது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்துள்ளார்.

இந்த அழைப்பினை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும்போக்குவாதத்தை இல்லாதொழித்தல், எதிர்கால ஆசிய தொடர்பிலும் இன்றைய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை சந்திப்பு நடத்த உள்ளார்.