ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை! அதிகாரம் என்னிடமே

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளை கலைப்பதற்கு ஜனாதிபதி எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கம்பளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளை கலைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டதாக கடந்த புதன்கிழமை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்பாளர் சபைகளை கலைக்கும் அதிகாரம் தமக்கே இருப்பதாகவும், அவற்றின் நியமனங்கள் தொடர்பில் மாத்திரமே அண்மையில் தாம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.