வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வழமை போல் இம்முறையும் போலி வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

அதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு அரசாங்கம் பல சலுகைகளை வழங்க உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர எம்பிலிப்பிட்டியவில் நேற்று முன்தினம் நடந்த வைபவம் ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.