தற்போதைய நிலைமையில் ஆட்சி அமைத்தால் நெருக்கடியை சந்திக்க நேரிடும்: கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி அமைக்கும் நோக்கம் தமக்கில்லை என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நிலைமையில் ஆட்சியமைக்கும் அணி மிகப் பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

இதனால், தற்போதைய சந்தர்ப்பத்தில் ஆட்சியமைக்கும் நோக்கம் எமக்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க,

எப்படி விலை சூத்திரம் அறிமுகப்படுத்தினாலும் ரூபாய் பெறுமதி இழப்பு மற்றும் எரிபொருள் மீதான வரி அதிகரிப்பே எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணம் என கூறியுள்ளார்.